‘சர்ச்சைக்குள்ளான பிரபல ஸ்டான் அப் காமெடியனின் ட்வீட்!’.. ‘வலுத்த கண்டனங்கள்!’.. ‘தொடர் புகார்களால் அட்டர்னி ஜெனரல் அதிரடி!’
முகப்பு > செய்திகள் > இந்தியாஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மீது சர்ச்சைக்குரிய ட்வீட்களை வெளியிட்டதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் அனுமதி அளித்துள்ளார்.
கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக் மரணம் தொடர்பான வழக்கில் அண்மையில் செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதே நாளில், ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பதிவிட்டிருந்த ட்வீட்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
அதில், உச்சநீதிமன்றத்தில் கட்சிக்கொடி பறப்பது போலவும், நீதிமன்றம் காவி நிறத்தில் இருப்பதாகவும் அவர் வெளியிட்டிருந்த ட்வீட்கள் சர்ச்சையானதை அடுத்து, அவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர பலர் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினர்.
இந்த நிலையில்தான் குணாலின் ட்வீட்கள் நகைச்சுவைக்கு அப்பாற்பட்டதாகவும், நீதிமன்ற அவமதிப்பிற்குமான எல்லையை கடந்ததாகக் குறிப்பிட்ட அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அவர் மீதான அவமதிப்பு வழக்கு தொடருவதற்கு ஒப்புதலை வழங்கியிருக்கிறார்.
மற்ற செய்திகள்