காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் முடிவில்... கட்சிக்குள் 'சூறாவளி புயல்'!.. கொதித்தெழுந்த மூத்த நிர்வாகிகள்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாராகுல் காந்தி குறித்து காட்டமாக பதிவிட்ட ட்விட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டெலிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்காலிக தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்றார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவரால் முழு அளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான தலைமை தேவை எனக் கருதுவதாகக் கூறி குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 மூத்த நிர்வாகிகள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். அதைத் தொடர்ந்து, காரிய கமிட்டி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி தற்காலிக தலைவர் சோனியா காந்தி இன்று கூட்டியுள்ளார்.
இதற்கிடையே, 23 சீனியர் தலைவர்கள் கடிதம் எழுதியது தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், கடிதத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறியிருந்ததாக தகவல் வந்தது. இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பொதுவெளியில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், 'நாங்கள் பா.ஜ.கவுடன் கூட்டு வைத்திருப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வாதாடினேன். பா.ஜ.க அரசைக் கீழே இறக்கி காங்கிரஸ் கட்சியைப் பாதுகாத்தேன். கடந்த 30 ஆண்டுகளில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக எந்த அறிக்கையையும் வெளியிட்டதில்லை. இருந்தாலும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தப் பதிவை கபில் சிபல் நீக்கியுள்ளார். அதற்கு விளக்கமளித்துள்ள அவருடைய புதிய ட்விட்டர் பதிவில், 'ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுவதை அவர் ஒருபோதும் கூறவில்லை என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் விளக்கினார். அதனால், என்னுடைய பழைய ட்விட்டை திரும்பப் பெறுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்