'டாக்டர் மாப்பிள்ளைதான்' வேணும்னு 'சொன்னவங்க' எல்லாம்... இப்போ 'வீட்டை' காலி பண்ண 'சொல்றாங்க'... 'இது ரொம்ப தவறுங்க'... 'கண்டித்த மத்திய அமைச்சர்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களை அவர்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு கூறுவது கண்டிக்கத்தக்க செயல் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் 67 நாட்களில் ஒரு லட்சம் பேருக்குப் பரவிய கொரோனா வைரஸ் அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்குப் பரவியுள்ளது. அதன் பின்னர் அடுத்த 4 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்குப் பரவி தனது வேகத்தை அதிகரித்துள்ளது. இது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி 446 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 22 பேர் புதிதாகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடைபெற்றது. அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்கும் மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக மாலை 5 மணிக்குப் பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி பலரும் தங்கள் வீட்டுக்கு வெளியே நின்று கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர். ஆனால், மருத்துவர்களுக்காக கைதட்டியது எல்லாம் சும்மா ஒருநாள் கூத்துபோல ஆகிவிட்டது.
தற்போது மருத்துவர்களுக்கு நோய் பரவ அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறி டெல்லி, நொய்டா, வாராங்கல், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் டாக்டர்கள் மற்றும் மருத்துவத்துறையில் பணி புரிபவர்கள்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்கள் வற்புறுத்துவதாகச் செய்திகள் வருகிறது
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இத்தகைய செய்திகள் மிகுந்த மன வருத்தத்தைத் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
I’m DEEPLY ANGUISHED to see reports pouring in from Delhi, Noida,Warangal,Chennai etc that DOCTORS & PARAMEDICS are being ostracised in residential complexes & societies. Landlords are threatening to evict them fearing #COVID2019 infection. Pls don’t panic !#CoronavirusLockdown
— Dr Harsh Vardhan (@drharshvardhan) March 24, 2020
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கொரோனாவால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. மருத்துவர்களும் பணியாளர்களும் அத்தனை விதமான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துதான் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் தன்னலமற்ற சேவையை நாம் பாராட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.