'பசங்களும், பொண்ணுங்களும் ஒரே டாய்லெட் யூஸ் பண்ணுங்க'...மாணவிகளுக்கு நேரும் அவலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாணவ-மாணவிகள் - பாதுகாப்பு படை வீரர்கள் என அனைவரும் ஒரே பொதுவான கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்ற அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பசங்களும், பொண்ணுங்களும் ஒரே டாய்லெட் யூஸ் பண்ணுங்க'...மாணவிகளுக்கு நேரும் அவலம்!

பீகார் மாநிலம்  பாட்னாவில் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் அருகே பஜார் சமிதி சாலையில் அமைந்துள்ளது பாபு ஸ்மரக் பெண்கள் உயர்நிலைப்பள்ளி. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த பள்ளியானது, கடந்த 1950 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சகோதரி சுந்தரி தேவியால் கட்டப்பட்டது. இந்நிலையில் பள்ளி கட்டடம் மோசமடைந்ததையடுத்து, கடந்த 2012 ல் ராஜேந்திர நகரில் உள்ள அரசு சிறுவர் உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டது.

ஆனால் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனிடையே இந்த பள்ளியில் உள்ள சில மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வந்தார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது மாணவிகளுக்கு என்று தனி கழிப்பிட வசதி இல்லாதது தான். மேலும் அதே வளாகத்தில் உள்ள வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுடனும், பாதுகாப்புப் வீரர்களுடனும் அங்கு உள்ள ஒரு கழிவறையைப் பகிர்ந்து கொள்ள மாணவிகள் கட்டாயப்படுத்தப்படும் அவலம் நிகழ்கிறது.

இந்த பள்ளியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில், மாணவிகளுக்கு என்று அடிப்படை வசதி இல்லாமல், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையையே பயன்படுத்த கட்டாயப்படுத்தப்படுவது கல்வியாளர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

SCHOOLSTUDENT, STUDENTS, BIHAR, COMMON TOILETS, SECURITY PERSONS