நாடு முழுவதும் பல பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து இருந்த போதும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா தொற்று தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரது மகள்,மருமகன், பேத்தி ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அர்ச்சுனனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இவர்கள் மதுரை சென்று திரும்பிய நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் தற்போது ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS