"என்ட பேரு ஸ்டாலின்" - இவ்ளோ அழகா மலையாளத்தில் சம்சாரிக்குறாரே... ட்ரெண்ட் ஆகும் முதல்வரின் பேச்சு
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழக முதல்வர் ஸ்டாலின் கேரளாவில் நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டில் மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | 'சின்ன தப்பு செஞ்சாலும் அவ்வளவுதான்".. எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்.. பின்னணி என்ன?
கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க தனி விமானம் மூலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்ணூருக்கு சென்றார். அவரை சிபிஎம் மத்திய குழு உறுப்பினரும் கேரள அமைச்சருமான எம்.வி கோவிந்தன் மற்றும் கண்ணூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
அப்போது "என்ட பெயர் ஸ்டாலின்" என அவர் பேசியதும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். மாநாட்டில் பேசிய ஸ்டாலின் "தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையே சங்க கால உறவு உள்ளது. திராவிடம் - கம்யூனிசம் இடையிலான உறவும் 80 ஆண்டு கால பழமை வாய்ந்தது. சுதந்திர போராட்ட வீரரான கப்பலோட்டிய தமிழன் வஉ. சிதம்பரனார் சிறை வைக்கப்பட்டது இதே கண்ணூரில் தான். தற்போது இங்கு இம்மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகளை தமிழில் மொழி பெயர்த்தவர். எல்லாவற்றிற்கும் மேல் என்ட பெயர் ஸ்டாலின்" என்றார்.
அழைப்பு
கேரள முதல்வர் உடனான நட்பு குறித்து பேசிய ஸ்டாலின்,"இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்தவுடன் நான் வருவதாக வாக்குறுதி கொடுத்தேன். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் நான் இக்கூட்டத்தில் பங்கேற்றதற்கு பினராயி விஜயன் உடனான நட்பும் ஒரு காரணம்" என்றார்.
மேலும், கேரளாவில் பினராயி விஜயன் சிறப்பாக ஆட்சி புரிந்து வருவதாகவும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஸ்டாலின் மலையாளத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
"உங்க ஏரியா-ல மின்சாரம் துண்டிப்பா? இத மறக்காம செய்யுங்க".. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!
மற்ற செய்திகள்