VIDEO: ‘கொரோனா வரும் தள்ளி நில்லு’!.. நமக்காக உழைக்கும் அவங்கல இப்படிதான் நடத்துவீங்களா?.. கொதித்த நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதூய்மை பணியாளரை தரக்குறைவாக நடத்தும் வீட்டு உரிமையாளர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவலர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். அதேபோல் தூய்மை பணியாளர்களும் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வருகின்றனர். இதுபோன்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அவர்களை சிலர் மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் இருவரை, கொரோனா பெயரை சொல்லி தரக்குறைவாக நடத்திய பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், தூய்மை பணியாளர் ஒருவர் வீட்டு உரிமையாளர் பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் கொரோனா பரவுகிறது தள்ளி நிற்கும்படி தூய்மை பணியாளர்களிடம் கூறுகிறார். மேலும் அதட்டிய அப்பெண், தண்ணீர் பட்டிலை தூய்மை பணியாளரின் கையில் கூட கொடுக்காமல் நடுரோட்டில் வைத்துவிட்டு வீட்டுக்குள் வேகமாக செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அந்த பாட்டிலை எடுத்து அவள் மூஞ்சிலேயே அடித்து இருக்க வேண்டும்.😡😡😡 pic.twitter.com/yNoKYuIfiE
— கருவாயன் (@karuvaayan_offi) June 22, 2020
கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் தங்களது உயிரையும் பெரிதாக பொருட்படுத்தாமல் இரவுபகலாக கடுமையாக உழைத்து வரும் தூய்மை பணியாளர்களை பெண் ஒருவர் தரக்குறைவாக நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்