செபியின் ரகசியங்கள்.. இமயமலை சாமியாரிடம் பகிர்ந்த சித்ரா ராமகிருஷ்ணா.. சிக்கும் முன்னாள் சிஇஓ

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், 2016 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அதிகாரி பதவி வகித்து வந்தார்.

செபியின் ரகசியங்கள்.. இமயமலை சாமியாரிடம் பகிர்ந்த சித்ரா ராமகிருஷ்ணா.. சிக்கும் முன்னாள் சிஇஓ

சிக்ஸ் லைன் அருகே.. 'ஸ்பைடர் மேன்' ஆக மாறிய 'பிரபல' வீரர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

சித்ராவின் பதவிக் காலத்தில், தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகராக ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவருக்கும், பங்குச் சந்தைக்கும் பெரிதாக தொடர்பு கிடையாது.

ஏகப்பட்ட சலுகைகள்

ஆனாலும், அவரை, ஆண்டுக்கு சுமார் 1.68 கோடி ரூபாய் ஊதியம் வழங்கி, பணி அமர்த்தப்பட்டுள்ளார். தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு, சுப்ரமணியனின் சம்பளம், 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், 2015 ஆம் ஆண்டு, ஆனந்த் சுப்ரமணியனுக்கு முதல் வகுப்பு விமான பயண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டில் ஆனந்த் சுப்ரமணியனின் CTC, 5 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், சுப்ரமணியன் நியமனத்தில், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி அவ்ருக்கு ஏராளமான சலுகைகள், ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இது பற்றி, பங்கு சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி விசாரணை மேற்கொண்டதில், சித்ரா ராமகிருஷ்ணன் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.

இமயமலை சாமியார்

என்எஸ்இயின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி தான் நடந்து வந்துள்ளார். தேசிய பங்குச் சந்தையைக் கூட சாமியாரின் அறிவுரைகள் படி தான் நடத்தி வந்துள்ளார். அது மட்டுமில்லாமல், தேசிய பங்கு சந்தையின் ரகசிய ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மின்னஞ்சல் மூலம், அந்த சாமியாருக்கு அனுப்பி வைத்து, அவருடைய முடிவின் படி, சித்ராவும் நடந்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சாமியார் முடிவு தான் கரெக்ட்

chitra ramkrishna nse ceo let faceless conman yogi to make decisions

ஆனால், அந்த சாமியாரை, சித்ரா ராமகிருஷ்ணன் ஒருமுறை கூட நேரில் பார்த்ததில்லை என்றும் கூறப்படுகிறது. சிரோன்மணி என்னும் பெயரில், அந்த சாமியாரை சித்ரா அழைத்து வந்துள்ளார். தலைமை செயல் அதிகாரியாக சித்ரா இருந்த சமயத்தில், தன் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் மாற்றும் யாருக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தகவல்களை சாமியாரிடம் கேட்டு, அவர் முடிவின் படி தான் செயல்படுத்தி வந்துள்ளார்.

ரகசியம் அம்பலம்

அப்படி தான், ஆனந்த் சுப்ரமணியனுக்கும், 3 ஆண்டுகளில், மூன்று முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதும், சாமியாரின் ஆலோசனைப் படி தான் என்பதும் தெரிய வந்துள்ளது. NSEயின் ஐந்தாண்டுக் கணிப்புகள், நிதித் தரவு, ஈவுத்தொகை விகிதம், வணிகத் திட்டங்கள்  உள்ளிட்ட பல முக்கியமான மற்றும் ரகசியம் காக்க வேண்டிய தகவல்களையும், சாமியாரிடம் சித்ரா பகிர்ந்து, அவரின் முடிவு படி, நடந்ததாகவும் கூறப்படுகிறது.

chitra ramkrishna nse ceo let faceless conman yogi to make decisions

மேலும், சித்ரா ராமகிருஷ்ணன் மின் அஞ்சலை ஆய்வு செய்து பார்த்த போது, சுப்ரமணியனுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு, அதிலும் 3 நாட்கள் மட்டும் வரலாம், விரும்பும் நேரத்தில் பணியாற்றலாம் என்ற சலுகையும் அளிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அபராதம்

தேசியப் பங்குச்சந்தைக்கு, ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில், சித்ரா ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால், முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்கு சந்தையை சாமியார் அறிவுரைப்படி நடத்திய சித்ரா ராமகிருஷ்ணா, பங்கு தகவல்களை பல்வேறு நிறுவனங்களுக்கு, ரகசியமாக பகிர்ந்து ஊழலில் ஈடுபட்டதாகவும் செபி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் அதிகாரியாக இருந்த ஒருவர், ரகசியம் காக்கும் ஆவணங்களை சாமியார் ஒருவருக்கு அனுப்பி, அதன்படி நடந்து கொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுனது ஒரே மேட்ச்.. அடிச்சதும் ஒரே ரன் தான்.. ஆனாலும், இவ்ளோ பெரிய தொகையா.. மாஸ்டர் பிளான் போட்ட Mumbai Indians

CHITRA RAMKRISHNA, NSE, NSE CEO, FACELESS CONMAN YOGI, சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்கு சந்தை

மற்ற செய்திகள்