இந்தியாவுல எந்த ஹெலிகாப்டரும் செய்ய முடியாத சாதனை.. "ராணுவத்தோட மிகப்பெரிய சொத்து" புகழும் அதிகாரிகள்.. என்ன ஸ்பெஷல்?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய விமானப் படைக்கு சொந்தமான CH-47F (I) சினூக் ஹெலிகாப்டர் புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளது.

இந்தியாவுல எந்த ஹெலிகாப்டரும் செய்ய முடியாத சாதனை.. "ராணுவத்தோட மிகப்பெரிய சொத்து" புகழும் அதிகாரிகள்.. என்ன ஸ்பெஷல்?

சாதனை

இந்திய விமானப் படையின் CH-47F (I) சினூக் ஹெலிகாப்டர் திங்கட் கிழமை அன்று இந்தியாவின் மிக நீளமான, இடைவிடாத பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தது. இது சண்டிகரில் இருந்து ஜோர்ஹாட் வரை (1910 கிலோமீட்டர்) இடைவிடாமல் 7.30 மணி நேரம் பறந்திருக்கிறது. இந்தியாவில் இதுவரையில் வேறு எந்த ஹெலிகாப்டரும் செய்யாத சாதனை இதுவாகும்.

சினூக் ஹெலிகாப்டரின் அபாரமான திறன் மற்றும் இந்திய ராணுவ படையின் துல்லியமான திட்டமிடல், செயல்படுத்தல் ஆகியவை காரணமாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

Chinook flies non-stop from Chandigarh to Jorhat

மிகப்பெரிய சொத்து

இது பற்றி இந்திய பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர்," இந்தியாவின் சினூக் விமானம் சண்டிகர் மாநிலத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் வரை உள்ள 1910 கிலோமீட்டர் தூரத்தை 7.30 மணி நேரம் இடைவிடாமல் பயணித்திருக்கிறது. செங்குத்தாக மேல் எழும்பும் திறன் உள்ள இந்த ஹெலிகாப்டர் மனிதர்கள் மற்றும் பொருட்களை சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பேரிடர் மீட்பு பணிகளில் இந்த ஹெலிகாப்டர்கள் மிகவும் உதவிகரமானவை. இது இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய சொத்து" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Chinook flies non-stop from Chandigarh to Jorhat

கூடுதல் டேங்குகள்

இந்த சினூக் வகை ஹெலிகாப்டரில் ஒன்றுக்கும் அதிகமான எரிபொருள் டேங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. நடுவானில் எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம் இதில் இல்லாததால் இந்த கூடுதல் டேங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ஆயுதப் படை வீரர்களை ஏற்றிச் செல்வது, ராணுவ பொருட்களை கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது இந்த ஹெலிகாப்டர்.

Chinook flies non-stop from Chandigarh to Jorhat

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அரசு ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 15 சினூக் மற்றும் 22 அப்பாச்சி அட்டாக் ஹெலிகாப்டர்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

IAF, HELICOPTER, CHINOOK, இந்தியராணுவம், சினூக், ஹெலிகாப்டர்

மற்ற செய்திகள்