“இவ்வளோ வேலை பண்றீங்களா?”.. “என்ன சிம்ரன் இதெல்லாம்?”.. சிக்கிய பெண் உளவாளி.. அம்பலமான சீனா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் அலுவலகம் (PMO) உள்ளிட்ட பெரிய பல அலுவலகங்களின் ரகசிய தகவல்களை  உளவு பார்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட சீன பெண் குயின்சியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சீன உளவாளி அமைப்பை (Chinese Spy Network) குறித்து ஒரு பெரிய வெளிப்பாடு வந்துள்ளது.

“இவ்வளோ வேலை பண்றீங்களா?”.. “என்ன சிம்ரன் இதெல்லாம்?”.. சிக்கிய பெண் உளவாளி.. அம்பலமான சீனா!

சீனா தனது 'இந்திய உளவு குழுவிடம்' மேற்கண்ட தகவல்களை கேட்டுக் கொண்டது என புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிய வந்துள்ளது. பெரிய அலுவலகங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நபர்கள், ஊழியர்களில் அதிக செல்வாக்கு மிக்கவர்களின் தகவல்களைப் பெற, கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு செல்வாக்கு மிக்க பெண்ணுடன், சீன மகாபோதி கோயிலின் தலைவர், குயின்சியை அறிமுகப்படுத்தியதுடன், பெறப்படும் தகவல்களை சீன மொழியில் மொழிபெயர்த்து, அனுப்பப்பட வேண்டும் என்றும் குயின்சிக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆவணங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரின் மனைவி திருமதி டிங் மற்றும் திரு. சோவுக்கு அனுப்பப்படவிருந்ததாகவும், வெளியான தகவல்கள் பாதுகாப்பு நிறுவனங்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலனாய்வு அமைப்புகள் அறிக்கையின் அடிப்படையில் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்த வழக்கில், பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, ஒரு சீனப் பெண் மற்றும் அவரது நேபாள கூட்டாளி ஷேர் பகதூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ளனர்.

மற்ற செய்திகள்