'பார்க்க பணக்கார லுக்'... 'கோடிகளில் புரண்ட பணம்'... 'எப்படி இத்தனை நாள் ஏமாற்றினார்?'... தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பார்ப்பதற்கு நன்கு படித்த, பணக்கார லுக்கில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த சார்லி பெங் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

'பார்க்க பணக்கார லுக்'... 'கோடிகளில் புரண்ட பணம்'... 'எப்படி இத்தனை நாள் ஏமாற்றினார்?'... தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்!

சீனாவைச் சேர்ந்த லூவோ சாங் இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறி தன்னை இந்தியர் என அடையாளப் படுத்திக் கொண்டார். இந்தியாவில் தனது பெயரை சார்லி பெங் என மாற்றிக் கொண்டு இந்தியராகவே வலம் வந்துள்ளார். அவர் வசித்து வந்த வீட்டின் அருகில் உள்ளவர்களிடம், தான் பார்மசி தொழில் செய்து வருவதாகவும், தன்னை பெரும் பணக்காரர் போலவும் காட்டிக்கொண்டுள்ளார். இங்கு பார்மசி மற்றும் ஆடையக தொழிலைச் செய்து வந்த அவர் இந்திய நாட்டிற்கு எதிரான தேச விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். அவர் குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்த நிலையில் கடந்த 2018 செப்டம்பரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான சார்லி பெங் இந்தியாவிற்கு எப்படி வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. கடந்த 2009ம் ஆண்டு வாக்கில் சீனாவிலிருந்து புறப்பட்ட பெங் திபெத் மற்றும் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மோசடி குற்றச்சாட்டில் அவரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்து விசாரணை நடத்தி வந்தது. அப்போது சட்டவிரோதமாகப் பணம் மாற்றிய குற்றமும் அவர் மீது சுமத்தப்பட்டது.

Chinese mystery man Charlie Peng under I-T, ED  scanner

இதையடுத்து மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் வருமான வரித் துறையினரால் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கடந்த வாரம் CBDT அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பெங் ஷெல் நிறுவனங்களின் தொடர்புகளோடு பல கோடி ரூபாய் ஹவாலா மோசடியில் அவர் ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தது. ஹாங்காங் மற்றும் அமெரிக்க டாலர்கள் மாதிரியான வெளிநாட்டு கரன்சிகளை ஹவாலா பரிவர்த்தனை செய்ததாதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளதாக CBDT தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சார்லி பெங்யை இன்னும் ஆழமாக விசாரித்தால், அவர் எந்த நிறுவனத்திற்காக பணியாற்றி வந்தார் என்பதும், சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியுள்ள சீனர்களின் விவரங்களையும் அறியலாம்,  என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்