குவியும் 'சவப்பெட்டிகள்'... 24 மணி நேரமும் இயங்கும் 'இடுகாடுகள்'... கட்டுக்குள் கொண்டுவர 'களமிறங்கிய' சீனா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி முதலிடத்தை பிடித்துள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் 80, 894 பேர் பாதிக்கப்பட்டு, 3,237 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து அதிக உயிரிழப்பு இத்தாலியில் ஏற்பட்டுள்ளது.

குவியும் 'சவப்பெட்டிகள்'... 24 மணி நேரமும் இயங்கும் 'இடுகாடுகள்'... கட்டுக்குள் கொண்டுவர 'களமிறங்கிய' சீனா!

இத்தாலியில் 41, 506 பேர் பாதிக்கப்பட்டு, 3, 405 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தோன்றிய சீனாவை விட இத்தாலி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு நாளைக்கு சுமார் 25 பேரின் சடலங்களை மட்டுமே எரிக்க முடியும் என்பதால், நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் அங்கு தேங்கிக்கிடக்கின்றன. இதனால் சவப்பெட்டிகளை எடுத்து செல்ல இத்தாலி அரசு ராணுவத்தை வரவழைத்துள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. தேவையான எண்ணிக்கையில் படுக்கைகள் இல்லாததால், 80 முதல் 95 வயது வரை உள்ள முதியவர்கள், சுவாசக்கோளாறு பாதிப்புடையவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இத்தாலியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சீனா அரசு களமிறங்கி உள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சீன மருத்துவர்களுக்கு அனுபவம் இருப்பதால் அங்கிருந்து சிறப்பு மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் இத்தாலியில் களமிறங்கி இருக்கின்றன. கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று இத்தாலிய மந்திரி லூய்கி டிஐ மாயோ கவலை தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு சூழ்நிலையில் சீனாவின் உதவி இத்தாலிக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10,000 வெண்டிலேட்டர்கள், 20 லட்சம் மாஸ்க்குகள், 20,000 ஆயிரம் பாதுகாப்பு சூட்கள் மற்றும்  மருத்துவ உதவிகள் ஆகியவற்றை இத்தாலிக்கு கொடுத்து உதவ சீன அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் இத்தாலியில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.