Sandunes others
RRR Others USA

இந்த மாதிரி 'வேலைய' செஞ்சிட்டா உண்மை பொய் ஆயிடுமா? அருணாச்சல பிரதேசத்தில் புகுந்து சீனா செய்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அருணாச்சல பிரதேஷம்: சீனா அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயர்களை மாற்றிய சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதிரி 'வேலைய' செஞ்சிட்டா உண்மை பொய் ஆயிடுமா? அருணாச்சல பிரதேசத்தில் புகுந்து சீனா செய்த சம்பவம்

இந்திய நாட்டின் ஒரு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா பல வருடங்களாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் தெற்கு திபெத் என்றும், ஜாங்னான் என குறிப்பிட்டு வருகிறது.

புலம்பும் சீனா:

சீனப்பகுதியை தான் இந்தியா ஆக்கிரமித்துள்ளது என சீனா புலம்பி வருகிறது. அருணாச்சல பிரதேச விவகாரத்தில் சீனா பிரச்சனை கிளப்பும் போதெல்லாம் இந்திய அரசு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்திய ஜனாதிபதி, பிரதமர் அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றால் ஒப்பாரி வைப்பது சீனாவின் வழக்கமாக மாறியுள்ளது.

China changed the names parts of Arunachal Pradesh

இந்நிலையில், அருணாச்சலில் உள்ள 15 இடங்களுக்கான பெயர்களை சீனா மாற்றி உள்ளது. இதில் எட்டு நகரங்கள், நான்கு மலைகள், இரண்டு ஆறுகள், ஒரு கணவாய் போன்றவையும் அடங்கும்.

இது முதல் தடவை அல்ல:

இந்த பெயர் மாற்றுதல் தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிநதம் பக்சி கூறும் போது, 'அருணாச்சல பிரதேசத்தின் பெயர்களை மாற்றுவது போன்ற முயற்சிகளில் சீனா ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2017 ஏப்ரலிலும் இது போன்று செய்துள்ளது. அப்படி மாற்றுவதன் மூலம் அவர்களுடைய நிலம் என உரிமை கொண்டாடுவதில் எந்த நியாயமும் கிடையாது.

China changed the names parts of Arunachal Pradesh

உண்மையை அழிக்க முடியாது:

அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது எதிர்காலத்திலும் தொடரும். அந்த மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை சூட்டுவதன் மூலம், உண்மையை மாற்றி விட முடியாது' எனக் கூறியுள்ளார்.

China changed the names parts of Arunachal Pradesh

இதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் சீனா இந்திய எல்லைப் பகுதியில் கூடாரம் இட்டு எஸ் 400 ஏவுகணை போன்றவற்றை நிறுத்திய சம்பவம் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே போர் பதற்றத்தையே ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் சீனா இப்படியாக இறங்கியிருப்பதால் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

CHINA, ARUNACHAL PRADESH, NAMES, சீனா

மற்ற செய்திகள்