'2020யே ஏன் இவ்வளவு பெரிய தண்டனை'... 'மூச்சு விட தவித்த பிஞ்சுகள்'... 'தூக்கி கொண்டு ஓடிய பெற்றோர்'... வாயுக்கசிவின் கோர முகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா ஒரு பக்கம் தனது கோர முகத்தை காட்டி வரும் நிலையில், விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் ஏற்பட்டுள்ள வாயுக்கசிவு மக்களை நிலைகுலைய செய்துள்ளது.

'2020யே ஏன் இவ்வளவு பெரிய தண்டனை'... 'மூச்சு விட தவித்த பிஞ்சுகள்'... 'தூக்கி கொண்டு ஓடிய பெற்றோர்'... வாயுக்கசிவின் கோர முகம்!

விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகியுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே குழந்தைகள் பலர் இந்த வாயுக்கசிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள வீடியோகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு என்ன ஆயிற்றோ என பதற்றத்தில், அந்த பெற்றோர் குழந்தைகளை எழுப்ப முயலும் காட்சிகள் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.

இதனிடையே தேசியப் பேரிடர் குழு மக்களை வெளியேற்ற அங்கு விரைந்துள்ளனர். மேலும் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாயுக்கசிவு குறித்து விசாரிக்க விசாகப்பட்டிணத்துக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.