'ஒரு டோஸ் ஊசி 16 கோடி'... 'என்ன டீரா, உன்ன அப்படி விட்டுருவோமா'... 'திரண்ட 16 கோடி'... 'ஆனா, அதிலிருக்கும் சிக்கல்'... விடாமல் போராடும் பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுழந்தை டீராவின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் திரட்டப்பட்டுவிட்டது. ஆனால், குழந்தை பிழைப்பாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 5 மாத குழந்தையான டீரா, முதுகெலும்பு தசைநாற் சிதைவு எனும் அபூர்வ நரம்பியல் நோயால் பாதிகப்பட்டிருக்கிறார்.
மூக்கில் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் சிகிச்சையில் இருக்கும் டீராவுக்கு செலுத்த வேண்டிய ஒரே ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.16 கோடி ஆகும்.
மும்பை SRCC மருத்துவமனையில் தற்போது டீரா, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இந்த குழந்தையின் பெற்றோர் காமாத் மற்றும் பிரியங்கா ஆவார்கள். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் டீராவின் தந்தை காமாத்தால் 16 கோடி ரூபாயை திரட்ட முடியவில்லை.
இதனால் சோசியல் மீடியாவில் crowd funding வழியாக நிதி திரட்டும் முயற்சியில் டீராவின் பெற்றோர் ஈடுபட்டனர். #TeeraFightsSMA என்ற ஹேஷ்டேக், தற்போது இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.
டீராவின் பெற்றோர் முயற்சியால் 16 கோடி ரூபாய் தற்போது திரட்டுப்பட்டுவிட்டது. ஆனால், சுங்க வரிக்கு தனியாக ரூ.2 கோடி முதல் 5 கோடி வரை திரட்ட வேண்டியுள்ளது. இதனால், குழந்தை டீராவுக்காக வரி விலக்கு அளிக்கக்கோரி பிரதமர் மோடி, மகாராஸ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரிடத்தில் உதவி கேட்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 14ம் தேதி டீரா பிறந்து 6 மாதம் நிறைவடைகிறது. பொதுவாக, இது போன்ற நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் 6 மாதத்துக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்க கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தற்போது வரை வெண்டிலேட்டர் உதவியுடன் தான் குழந்தை டீரா சிகிச்சையில் இருக்கிறாள். இதற்கு முன் கேரளாவிலும் இதேபோன்று ஒரு குழந்தை பாதிக்கப்பட்டிருந்தார். நிலம்பூரை சேர்ந்த அந்த குழந்தை கோழிக்கோட்டில் சிகிச்ச பெற்று வந்தார்.
பொதுவாக, அந்த ஊசியை செலுத்தினால் நிச்சயம் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், கேரளாவைச் சேர்ந்த அந்த குழந்தைக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டு தற்போது நன்றாக உள்ளார்.
டீராவுக்கு செலுத்தப்பட வேண்டிய ஊசி ஒரே ஒரு முறை செலுத்தினால் போதுமானது. Novartis நிறுவனத்தின் தயாரிப்பான Zolgensma என்ற இந்த மருந்துக்கு கடந்த 2019ல் அனுமதியளிக்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை 5 குழந்தைகளுக்கு மட்டுமே இந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் 5 ஆண்டுகளுக்கு முன் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. நிலம்பூர் குழந்தைக்கு நடந்தது போலவே, டீராவுக்கும் அதிசயம் நடந்தால், நிச்சயம் குழந்தை பிழைத்துக்கொள்வார்.
மற்ற செய்திகள்