அதெல்லாம் முடியாது கோழி குஞ்சுக்கும் ‘டிக்கெட்’ எடுங்க.. மிரண்டு போன பயணி.. இந்த ‘விநோத’ சம்பவம் எங்க நடந்தது தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாபேருந்தில் கோழிக்குஞ்சுக்கு டிக்கெட் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் ஹோசனகராவில் இருந்து ஷிரூரு செல்வதற்காக பழங்குடியினர் குடும்பம் ஒன்று அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளது. நடத்துனர் வந்ததும் தங்கள் அனைவருக்கும் டிக்கெட் எடுத்துள்ளனர். அப்போது அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது.
உடனே உள்ளே என்ன இருக்கிறது என்று நடத்துனர் கேட்டுள்ளார். இதனை அடுத்து பையில் இருந்த கோழிக்குஞ்சை எடுத்து காண்பித்துள்ளனர். இதனைப் பார்த்த நடத்துனர், பேருந்தில் கோழிக்குஞ்சை எடுத்துச் செல்வதற்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட பழங்குடியினக் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் டிக்கெட் எடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் விதிமுறைப்படி டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்று நடத்தினர் கறாராக கூறியுள்ளார். இதனை அடுத்து வேறுவழியில்லாமல் கோழிக்குஞ்சுக்கு 53 ரூபாக்கு அரை டிக்கெட் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோழிக்குஞ்சை அவர்கள் 10 ரூபாய்க்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்