காணாமல் போன இளம்பெண்.. வேறு மாநிலத்தில் சடலமாக கிடந்த பரிதாபம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்னும் பகுதியை சேர்ந்த தனு குர்ரே (வயது 26). இவர் ராய்ப்பூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, கடந்த மாதம் 21 ஆம் தேதி தனு குர்ரேவை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இளம்பெண் காணாமல் போனது தொடர்பாக போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வந்த சமயத்தில் சில அதிர்ச்சி தகவல்களும் கிடைத்துள்ளது.
தனு குர்ரே காணாமல் போன தினத்தில், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த சச்சின் அகர்வால் என்ற வாலிபருடன் பலங்கிர் என்னும் பகுதிக்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், தனு குர்ரேவின் உடல் பாதி எரிந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பாக பலங்கிர் மாவட்டத்தில் அமைந்துள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக இளம்பெண்ணின் உடல் கிடப்பது தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில், அது தனு குர்ரே தான் என்பதை அவரின் பெற்றோர்கள் மூலம் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனு குர்ரே இறந்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முதலில் துப்பாக்கியால் சுடப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், தனுகுர்ரே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அகர்வால் என்ற வாலிபரையும் போலீசார் பிடித்து விசாரணை வந்துள்ளனர்.
அவர் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ராய்ப்பூர் பகுதிக்கு வந்திருப்பது தெரிய வந்த நிலையில், அதன் பின்னர் தனு குர்ரேவுடன் மாலில் சினிமா பார்க்கவும் சச்சின் அகர்வால் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், படம் பார்த்து விட்டு திரும்பி கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவரிடம் இருந்து தனுகுர்ரேவின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதன் பெயரில், அவரிடம் தகராறில் ஈடுபடவும் சச்சின் அகர்வால் ஆரம்பித்துள்ளார். இருவருக்கும் இடையே மிகப் பெரிய அளவில் பிரச்சனை உருவாகி உள்ளது. தொடர்ந்து, தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதாக தனு குர்ரேவை கொண்டு போன சச்சின், வழியிலேயே அவரை கொலை செய்து விட்டு பின்னர் பலங்கிர் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று எரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
வேறு ஏதேனும் காரணத்திற்காக சச்சின் அகர்வால் தனு குர்ரேவை கொலை செய்தாரா அல்லது வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்