ஒரே நேரத்தில் 'இரண்டு' பெண்களை 'திருமணம்' செய்த 'வாலிபர்'!!!... அவரே விவரித்த 'காதல் ஸ்டோரி'... "அந்த கதைய கேட்டா நீங்க ஆடிப் போய்டுவீங்க...!!"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சட்டீஸ்கர் மாநிலம் பஸ்டர் (bastar) என்னும் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒரே நேரத்தில், ஒரே மண்டபத்தில் வைத்து இரண்டு பெண்களை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரே நேரத்தில் 'இரண்டு' பெண்களை 'திருமணம்' செய்த 'வாலிபர்'!!!... அவரே விவரித்த 'காதல் ஸ்டோரி'... "அந்த கதைய கேட்டா நீங்க ஆடிப் போய்டுவீங்க...!!"

பஸ்டர் பகுதியிலுள்ள சந்து மவுர்யா என்ற இளைஞர் வசித்து வருகிறார். விவசாயியான இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 21 வயதான சுந்தரி காஷ்யப் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார். தினந்தோறும் மொபைல் போன் மூலம் அதிக நேரத்தை செலவழித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அதன் பிறகு மிகப் பெரிய திருப்புமுனையாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இவர்கள் காதலிக்க ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் சந்தித்த ஹசீனா என்ற பெண்ணுடன் சந்து காதலில் விழுந்துள்ளார். சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வருவது குறித்து ஹசீனாவிடம் சந்து தெரிவித்துள்ளார்.

அதே போல ஹசீனா குறித்து சுந்தரிக்கும் தெரிய வர, இருவரும் தன்னுடன் வாழ விருப்பம் தெரிவித்ததாக சந்து தெரிவித்துள்ளார். மூவரும் மாறி மாறி தொலைபேசி மூலம் பேசி வந்த நிலையில், திடீரென ஹசீனா சந்துவுடன் வாழ வேண்டி அவரது வீட்டிற்கே வந்துள்ளார். ஹசீனா சந்துவின் வீட்டிற்கு வந்துள்ள தகவலறிந்த சுந்தரியும், சந்துவுடன் இணைந்து வாழ அவரின் வீட்டிற்கே வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மூவரும் இணைந்து திருமணம் செய்யாமலே சந்துவின் வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

திருமணம் செய்யாமல் இரண்டு பெண்களுடன் இணைந்து வாழ்ந்து வந்ததை சந்துவின் கிராம மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இருவரையும் திருமணம் செய்ய போவதாக சந்து தெரிவித்துள்ளார். இரண்டு பேரும் தன் மீது விருப்பம் கொண்டுள்ளதாகவும், அவர்களை ஏமாற்றாமல் இணைந்து சந்தோஷமாக வாழ்வேன் என்றும் சந்து குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 500 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் சந்து - ஹசீனா - சுந்தரி திருமணம் நடைபெற்ற நிலையில், ஹசீனாவின் குடும்பத்தினர் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுந்தரியின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. மூவரும் இணைந்து விவசாயம் செய்து மிக மகிழ்ச்சியாக வாழ முடிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்