"படிக்கணும்னு ஆசை சார்.. அப்பா இல்லாததுனால கஷ்டப்படுறோம்".. முதல்வரிடம் கண் கலங்கிய சிறுமி..அடுத்த நிமிஷமே அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொருளாதார வசதி இல்லாததால் கல்வி பயில முடியவில்லை எனத் தெரிவித்த சிறுமிக்கு அம்மாநில முதல்வர் உதவியது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

"படிக்கணும்னு ஆசை சார்.. அப்பா இல்லாததுனால கஷ்டப்படுறோம்".. முதல்வரிடம் கண் கலங்கிய சிறுமி..அடுத்த நிமிஷமே அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்..!

நலத்திட்டங்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த பல்வேறு நலத் திட்டங்களை நேற்று (வியாழக்கிழமை) அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் திறந்துவைத்தார். 44.54 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திட்டங்களை திறந்துவைத்த முதல்வர் 12 கோடி ரூபாயில் கட்டப்பட இருக்கும் இந்திரா பிரியதர்ஷினி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பொதுமக்கள் முதல்வரிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது சிறுமி ஒருவர் முதல்வரிடம் கோரிக்கை வைக்க, அருகில் இருந்த அனைவரும் அதைக்கேட்டு கலங்கிப்போயினர்.

கோரிக்கை

சத்தீஸ்கர் மாநிலத்தின் சித்ரகூட் பகுதியை சேர்ந்தவர் மாணவி லோகேஸ்வரி. இவருடைய தந்தை 15 வருடங்களுக்கு முன்பாக மரணமடைந்திருக்கிறார். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக லோகேஸ்வரி முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், பொருளாதார வசதி இல்லாததன் காரணமாக, தன்னாலும் தனது தம்பியாலும் கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கண்கலங்கியபடி தெரிவித்தார் லோகேஸ்வரி.

முதல்வரிடம், "எனக்கு படிக்க மிகவும் ஆசை. அப்பா இறந்துவிட்டதால் இப்போது கஷ்டப்படுகிறோம். தயவு செய்து உதவுங்கள்" என லோகேஸ்வரி கூற, அங்கிருந்த அனைவரும் கலங்கிப்போயினர்.

முதல்வர் அதிரடி

பொருளாதார வசதி இல்லாததால் கல்வி கற்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் உதவி செய்யும்படியும் மாணவி லோகேஸ்வரி கோரிக்கை வைத்த நிலையில், முதல்வர் பூபேஷ் பாகல் உடனடியாக 3 லட்ச ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார். லோகேஸ்வரியின் தேவையை அறிந்தவுடன், பஸ்தார் மாவட்ட பொறுப்பாளரை அழைத்த முதல்வர், உடனடியாக சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் அளிக்கும்படி உத்தரவிட்டார். இதனைக்கேட்ட பொதுமக்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

கல்வி கற்க ஆசை இருந்தும், பொருளாதார வசதி இல்லாததன் காரணமாக படிப்பை தொடர முடியவில்லை என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த மாணவிக்கு உடனடியாக 3 லட்ச ரூபாய் அளிக்க முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

CHHATTISGARH, BHUPESHBAGHEL, EDUCATION, சத்தீஸ்கர், பூபேஷ்பாகல், கல்வி

மற்ற செய்திகள்