‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் மனைவி குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து படுகாயங்களுடன் அங்கிருந்த காவலர்களால் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் போலீஸ் விசாரணையில் அவருடைய பெயர் பரத் என்பதும், அவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஜெனரல் மேனேஜராக வேலை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை நொளம்பூரைச் சேர்ந்த அவர் மனைவி சிவரஞ்சனி, 5 வயது மகள் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோருடன் நொய்டாவில் வசித்து வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பரத்துடைய குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுக்க, மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்த அவருடைய மனைவி மற்றும் சகோதரர் இறந்தது அவர்தான் என உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்பிறகு பரத்தின் சகோதரர் கார்த்திக் மட்டும் மருத்துவமனையில் இருக்க, ரஞ்சனி குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் கணவரின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வேதனையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். முதலில் தன் குழந்தையை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, பின் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “பரத்துடைய குடும்பம் பொருளாதார சிக்கலில் இருந்ததாக அவருடைய சகோதரர் கூறியுள்ளார். வீட்டில் கைப்பற்றப்பட்ட உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். வீட்டிலிருந்து தற்கொலை கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளனர்.
மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.