ஏர்போர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை கையெடுத்துக் கும்பிட்ட காவல் அதிகாரி.. என்ன நடந்தது..? ஆந்திராவில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி விமான நிலையத்தில் ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, போராட்டம் ஒன்றில் கலந்து கொள்ள இன்று திருப்பதி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது போலீசார் அவரை திருப்பதி செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிர்ப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு வரவேற்பு அறைக்குள் திடீரென தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்தார்.
இதனால் சந்திரபாபு நாயுடுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ‘நான் 14 ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளேன். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன். எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு உரிமை இல்லையா?’ என கேள்வி எழுப்பினார்.
Andhra Pradesh: TDP leader and former Chief Minister N Chandrababu Naidu sat down in protest at Tirupati airport in Renigunta after he was detained by Renigunta police while he was going to attend election campaigning in Chittoor district. pic.twitter.com/WO71S1gyVS
— ANI (@ANI) March 1, 2021
அப்போது காவல் அதிகாரி ஒருவர் கையெடுத்துக் கும்பிட்டு சந்திரபாபு நாயுடுவை சமாதானப்படுத்தினார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான நடத்தை விதிமுறை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததாக போலீசார் விளக்கமளித்துள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்