'லாக் டவுன் நேரத்துல இப்படி பண்ணலாமா'?... 'துளைத்து எடுத்த நெட்டிசன்கள்'... 'என்ன செய்தார் சந்திரபாபு நாயுடு'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் உள்ளூர் விமானச் சேவை ஆரம்பித்துள்ள நிலையில், தெலங்கானாவிலிருந்து ஆந்திராவுக்குச் சாலை மார்க்கமாக சந்திரபாபு நாயுடு வந்தது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐதராபாத்திலிருந்து அமராவதிக்கு வந்தார். அப்போது அவரது கட்சி தொண்டர்கள் அவருக்கு அமோக வரவேற்பை அளித்தார்கள். அந்த நிகழ்வு தான் தற்போது கடும் சர்ச்சையாக மாறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாமல் இப்படி சந்திரபாபு நாயுடுவுக்கு வரவேற்பு அளித்தது நிலைமையை இன்னும் மோசமாக்கும் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச்சூழ்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது. ''மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுகளை மொத்த நாடும் பின்பற்றி வருகிறது. ஆனால் ஐதராபாத்திலிருந்து வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு, அவரது தொண்டர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மலர் தூவி வரவேற்றுள்ளார்கள்'' என அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சந்திரபாபு நாயுடு, கொரோனா பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலத்திலிருந்து வந்துள்ளார். எனவே அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
కృష్ణాజిల్లాలో చంద్రబాబునాయుడుకి అడుగడుగునా ఘనస్వాగతం పలుకుతున్న తెలుగుతమ్ముళ్ళు#TDPTwitter @ncbn pic.twitter.com/qBxGhqrVrQ
— TV5 News Channel (@tv5newsnow) May 25, 2020
மற்ற செய்திகள்