'எல்லையில்' அதிகரிக்கும் 'பதற்றம்...' 'சீனாவுடன்' மற்றொரு 'மோதலுக்கு வாய்ப்பு?' 'எச்சரிக்கும் ராணுவ அதிகாரி...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஎல்லையில் மற்றொரு மோதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மூத்த ராணுவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
கடந்த மே மாதம் முதல் இந்தியா, சீனாவுக்கிடையே எல்லைப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, இரு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
மக்களிடையே சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளதால் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், சீனாவுக்கு வர்த்தக ரீதியாக கட்டுப்பாடுகளை விதிக்க பல்வேறு நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.
இதனிடையே இந்திய எல்லைக்குள் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கு சீன எல்லைக்குள் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை, கல்வான் பள்ளத்தாக்கு இந்திய எல்லைக்குள் இருப்பது வரலாற்று ரீதியாக தெளிவாக இருப்பதாக நேற்று விளக்கமளித்தது. மேலும், எல்லை விவகாரத்தில் சீனா தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 20 வீரர்களின் வீரமரணத்தை தொடர்ந்து எல்லையில் சூழல் மாறியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எந்த நேரத்திலும் மற்றொரு மோதல் நடைபெறும் அளவுக்கு பதற்றமான சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் தலைமை ஜெனரல் வி.பி.மாலிக் கூறுகையில், “பிரச்சினையை உடனடியாக பேசித் தீர்க்காவிட்டால் மற்றொரு மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரு ராணுவத்தினரும் எதிர் எதிரே நின்றுகொண்டிருக்கும்போது கோபமும், பதற்றமும் அதிகமாக இருக்கும். சிறிய பிரச்சினை கூட பெரிய மோதலாக உருவெடுக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்