'திடீரென மஞ்சள் நிறமாக மாறிய நபர்'... 'பதற்றத்துடன் மருத்துவமனைக்கு விரைந்த சொந்தங்கள்'... நோயாளியை பார்த்ததும் மருத்துவர் கேட்ட ஒரே கேள்வி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த ஒருவரின் தோல் நிறம் திடீரென மஞ்சள் நிறமாக மாறியதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'திடீரென மஞ்சள் நிறமாக மாறிய நபர்'... 'பதற்றத்துடன் மருத்துவமனைக்கு விரைந்த சொந்தங்கள்'... நோயாளியை பார்த்ததும் மருத்துவர் கேட்ட ஒரே கேள்வி!

Du என்று அழைக்கப்படும் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள், "அவர் chain smoker-அ" என்று கேள்வி கேட்டதும், உடனிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அப்போது அவர்கள், "ஆம்" என்று தலை அசைத்ததும் மருத்துவர்கள் கூறிய செய்தி அவர்களை உலுக்கிவிட்டது.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உடலில் இரண்டு கட்டிகள் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.அவற்றில் ஒன்று புற்றுநோய்க்கட்டி. அந்த கட்டி அவரது கணையத்தில் இருந்ததால், அது அவரது பித்தநீர் வெளியேறுவதைத் தடுத்துக்கொண்டிருந்திருக்கிறது.

ஆகவே, பித்தநீர் வெளியேறாததால்தான் அவரது உடல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. தற்போது, மருத்துவர்கள் அந்த இரண்டு கட்டிகளையும் அகற்றியிருக்கிறார்கள்.

அந்த கட்டிகளுக்கு காரணம், Du, 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிகாரராக இருந்ததும், புகைபிடித்ததும்தான்.ஆகவே, தயவு செய்து மதுவையும் புகைப்பிடித்தலையும் நிறுத்துமாறு மருத்துவர்கள் Duவை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கட்டிகள் அகற்றப்பட்டதும் Duவின் தோல் நிறம் சாதாரணமாகிவிட்டது என்பதுதான்.

இச்சம்பவம் சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்