கொரோனா தொடர்பான ‘ஊழல்’ புகார் மட்டுமே இவ்ளோவா..! ‘மலைக்க’ வைக்கும் எண்ணிக்கை.. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா தொடர்பான ஊழல் புகார்கள் அதிகமாக வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா சிகிச்சை மற்றும் முறையாக செயல்படாமல் உள்ள அதிகாரிகள் குறித்து புகார் அளிக்க மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு இணைதள போர்டலை உருவாக்கியது. அதன்படி இதுவரை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,67,000 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் ஊழல் தொடர்பான புகார்கள் மட்டும் 40,000 வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கையாளும் போது அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானது, லஞ்சம் மற்றும் நிதி மோசடி புகார்களும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்