வட்டிக்கு வட்டி வசூல்... உச்ச நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக்கு பின்... இஎம்ஐ (EMI) விவகாரத்தில் 'குட் நியூஸ்' சொன்ன மத்திய அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இஎம்ஐ அவகாசத்தை இண்டு ஆண்டுகள் கூட நீட்டிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

வட்டிக்கு வட்டி வசூல்... உச்ச நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக்கு பின்... இஎம்ஐ (EMI) விவகாரத்தில் 'குட் நியூஸ்' சொன்ன மத்திய அரசு!

வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டது. ஆனால், மத்திய அரசு விளக்கமளிக்காத சூழலில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டது. அப்போது, "கொரோனா பொது முடக்கத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மத்திய அரசின் கடமைதான்.

வட்டி வசூல் தொடர்பாக ரிசரவ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக்கொள்வதை ஏற்க முடியாது. எப்போதும் ரிசரவ் வங்கியின் பின்னால் மத்திய அரசு ஒளிந்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளீர்கள். கடன் செலுத்துவோரின் பாதிப்புக்கு மத்திய அரசின் பொது முடக்க உத்தரவே காரணம்" என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

இந்நிலையில், இது குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு, 'இஎம்ஐ அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்கலாம்' என தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறைக் குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்