கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த... 40 லட்சம் பேருக்கு உதவித்தொகை!.. மத்திய அரசு அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேலையிழப்பால் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு, 3 மாதங்களுக்கான பாதி சம்பளத்தை உதவித்தொகையாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த... 40 லட்சம் பேருக்கு உதவித்தொகை!.. மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கால் பலர் வேலை இழந்து, வாழ்வாதாரம் நலிந்து சிரமப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 24 முதல் வரும் டிசம்பர் 31 வரை, வேலையிழந்துள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு (Employees State Insurance Corporation), உதவித்தொகை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

ESIC-இல் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகையை பெற முடியும். அதன் அடிப்படையில், 3 மாதங்களுக்கான ஊதியத்தில் 50 விழுக்காடு தொகையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால், சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், இந்த திட்டத்தினை அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்