தமிழகத்தின் கோயம்புத்தூர் - சூலூர் பகுதிகளுக்கு இடையில் உள்ள கூனூரில் இன்று இந்திய விமானப் படையின் ஐஏஎப் எம்ஐ-17வி5 ராணுவ ஹெலிகாப்ட்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. ஹெலிகாப்ட்டரில் 14 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஹெலிகாப்ட்டரில் இருந்த பலர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி வரும் தகவல்படி, முப்படைத் தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத்துடன் அவரது மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 14 பேரில் 13 பேர் இறந்து விட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். விமானி வருண் மட்டும் 80 சதவிகித தீக்காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவை அனைத்தும் இந்திய விமானப்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும்.
With deep regret, it has now been ascertained that Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and 11 other persons on board have died in the unfortunate accident.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
மற்ற செய்திகள்