'மன்னிச்சிடுங்க, தப்பு நடந்துடுச்சு...' சிபிஎஸ்சி தேர்வில் இடம்பெற்ற 'கேள்வி'யினால் வெடித்த சர்ச்சை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சிபிஎஸ்சி தேர்வில் ஆங்கில பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று  இந்திய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

'மன்னிச்சிடுங்க, தப்பு நடந்துடுச்சு...' சிபிஎஸ்சி தேர்வில் இடம்பெற்ற 'கேள்வி'யினால் வெடித்த சர்ச்சை...!

பெண்கள் நடந்துகொள்ளும் விதம் என்று கொடுக்கப்பட்டிருந்த அந்தக் கேள்வியில் பல்வேறு கருத்துகள் பெண்களுக்கு எதிராக இருந்தது. அந்த வினாத்தாளில் குறிப்பாக, அந்த வினாத்தாளில் பெண்களைப் பற்றிய பிற்போக்குத்தனமான எண்ணங்கள் மற்றும் ஆணாதிக்கத்தை குறிக்கும் வகையில் சில வாக்கியங்கள் கேள்வியில் இருந்தது.

அதாவது அதில், “பெண்கள் விடுதலையானது முதல் குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது. இப்போதெல்லாம் மனைவிமார்கள் குழந்தைகளை சரியாக வளர்ப்பதில்லை. குடும்பத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாவதால் பெற்றோர் என்ற கட்டமைப்பை அவர்கள் அழிக்கிறார்கள்.

முன்பெல்லாம் பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தனர். இப்போது அப்படி இல்லை. அதனால் அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளும் ஒழுங்கீனமாக வளர்கின்றன. மேலும், ஒழுக்கத்தின் வழிமுறைகளை இழந்துவிட்டார்கள்” என கேள்வியாக கொடுத்துவிட்டு, இந்த பதிவுக்கு தலைப்பு வைக்க வேண்டும் என கூறி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டது.

அதாவது, குழந்தைகளின் ஒழுங்கீனத்திற்கு யார் காரணம்?, வீட்டில் ஒழுக்கம் சீர்கெடுவதற்கு என்ன காரணம்?, வீட்டில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கான இடம் என்ன?, மற்றும்  குழந்தைகள் உளவியல் என்ற நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த சம்பவம் சர்ச்சையாகி இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சியினரும், பெண்கள் நல அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். சில அமைப்புகள் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்படும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள சிபிஎஸ்சி நிர்வாகம், தவறு நடந்துவிட்டது. எனவே, இந்த கேள்விக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

CBSE, QUESTION, CONTROVERSY, சிபிஎஸ்சி, கேள்வி, சர்ச்சை

மற்ற செய்திகள்