'அமைச்சர்கள் மீட்டிங்யில் பிரதமர் சொன்ன முக்கிய விஷயம்'... '12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு ரத்து'... மத்திய அரசு அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக 10ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 'ஜூலை 15 - ஆக., 26க்குள் தேர்வுகளை நடத்தி, செப்டம்பரில் முடிவுகளை வெளியிடலாம்' என, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பல மாநிலங்களில் கொரோனா தோற்று உச்ச நிலையில் இருப்பதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்' என, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்வுகளை ரத்து செய்யலாமா ,வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுத்தேர்வை நடத்த மாற்று வழி உண்டா என்பது குறித்தும், மாநிலங்கள் அளித்துள்ள எழுத்து பூர்வ கருத்துக்களையும், பிரதமர் ஆய்வு செய்தார்.
அப்போது கொரோனா பரவல் மற்றும் மாணவர்களின் உடல் நலம் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதி,12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து 12 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்