'கொரோனா' வைரஸ் வடிவில் 'கார்..!' 'ஹைதராபாத்' நிபுணருக்குத் தோன்றிய 'மகா சிந்தனை...' 'ஊரடங்கின்' நடுவே உலா வந்து 'விழிப்புணர்வு...'
முகப்பு > செய்திகள் > இந்தியா"தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கே.சுதாகர் என்பவர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கொரோனா வைரஸ் வடிவில் கார் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை 5,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இதுவரை 63 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், தலைநகர் ஹைதராபாத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கே.சுதாகர் என்பவர் கொரோனா வைரஸ் வடிவில் காரை வடிவமைத்துள்ளார்.
இந்தகாரை பார்ப்பவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த கார் மூலம் நகரில் வலம் வரும் சுதாகர், கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், எவ்வாறு பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.