'அங்க டிசம்பர்லயே கொரோனா பரவிடுச்சு...' 'அதுமட்டுமல்ல, பெப்ரவரியில அங்க...' ஆளுநர் கூறிய செய்தியினால் மக்கள் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் டிசம்பர் மாதமே பரவ ஆரம்பித்திருக்க கூடும் என கலிபோர்னியா ஆளுநர் கூறிய செய்தி அமெரிக்கா மக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தொடவுள்ளது. கோவிட் 19 தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இங்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9 லட்சத்து எழுபத்தைந்தாயிரத்தை கடந்து செல்கிறது. உயிரிந்தவர்களின் எண்ணிக்கையும் வரலாறு காணாத நிலைக்கு செல்கிறது.
இதனால் அமெரிக்காவில் இருந்து வரும் அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசோம் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் அன்றே அமெரிக்காவில் பரவியிருக்க கூடும் என்ற சந்தேக கூற்றை எழுப்பியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தான் கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்தார் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 6 மற்றும் பிப்ரவரி 17 ஆகிய தேதிகளில் உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர்களுக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிற்குள் கொரோனா வைரஸ் எப்பொழுது பரவியது என்பது குறித்த சந்தேகம் அந்நாட்டு மக்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கலிபோர்னியா அரசு, மாகாணம் முழுவதும் டிசம்பர் மாதம் முதல் இறந்தவர்களின் பிரேத பரிசோதனைகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
கலிபோர்னியா அரசு அறிவித்துள்ள இந்த செய்தி அமெரிக்க மக்களை மேலும் குழப்பத்திலும் உலக நாடுகளை உற்று நோக்கவும் செய்துள்ளது.