'இது ஒர்த்து பாஸ்'... 'டீ குடிக்க 14,000 அடி' கூட போலாம்... வைரலாகும் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகில் முதன்முறையாக 14,000 அடி உயரத்தில் குளு குளு ஐஸ் கஃபே லடாக்கில் அமைந்துள்ளது.

'இது ஒர்த்து பாஸ்'... 'டீ குடிக்க 14,000 அடி' கூட போலாம்... வைரலாகும் புகைப்படங்கள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள லெ மனல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு கிராமம்தான் கையா மீரு. மலைகளுக்கு நடுவே உள்ள இந்த கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். மேலும், இங்கு மலை ஏற்றம் மற்றும் மலை சறுக்கு விளையாட்டு மிக பிரபலமானவை.

இந்நிலையில், சுற்றுலா பயனிகளை மகிழ்விக்க, இந்த கிராமத்தை சேர்ந்த ஜிக்மெட் டண்டப், நவாங் பன்சோக் மற்றும் சோனம் சோஸ்டப் ஆகிய மூவரும் சேர்ந்து 14000 அடி உயரத்தில் மலைகளுக்கு நடுவே ஒரு பனிக்கட்டிகளால் ரெஸ்டாரண்ட் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேசிய அந்த மூன்று இளைஞர்களும், வித்தியாசமான முறையில் ரெஸ்டாரண்ட் உருவாக்க வேண்டும் என்ற ஆசைதான் இந்த பனிக்கட்டிகளால் ஆன கஃபே. மேலும், இந்த ரெஸ்டாரண்டில் அனைத்து விதமான டீ, காபி, சூப், நூடுல்ஸ் ஆகியவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மலை ஏற்றம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இது மிகப்பெரிய ஆனந்தத்தை கொடுக்கும் என்று அந்த கஃபே உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.