"டிவி ரிமோட்-னு ஒன்ன கண்டுபிடிக்காமலேயே இருந்திருக்கலாம்".. நெட்டிசன்களை யோசிக்க வச்ச ஆனந்த் மஹிந்திராவின் போஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் நெட்டிசன்களை கவர்ந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இவரை 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ரிமோட்
பொதுவாக வீடுகளில் டிவி ரிமோட் மூலமாக வரும் பஞ்சாயத்துகள் மிக அதிகம். நாட்டை கைப்பற்ற துடிக்கும் வீரன் போல, டிவி பார்க்க துவங்கிய உடனேயே ரிமோட்டை தூக்க பெரும்பாலானோர் ஆசைப்படுவதும் உண்டு. இதனால் பல வீடுகளில் பெரும் ரகளைகளே நடந்தேறும். ஆனால், 90ஸ் கிட்ஸ்களுக்கு ரிமோட் என்பதே சமீபத்திய பழக்கம் தான். ஆண்டனா வைத்த டிவியில் அலையலையாக படம் பார்த்த அனுபவமும் அவர்களுக்கு உண்டு. திடீரென கோளாறு ஏற்படுகையில் டிவியில் இருக்கும் பட்டன்களை சரிசெய்யும் சாகச அனுபவமும் அவர்களுக்கு இருந்திருக்கும்.
Images are subject to © copyright to their respective owners.
ட்வீட்
இந்நிலையில் இதுதொடர்பாகத்தான் ஆனந்த் மஹிந்திரா ஒரு ட்வீட்டை தட்டியுள்ளார். அதில் அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் பழங்கால டிவி ஒன்று இருக்கிறது. அதில் "என்னுடைய பெற்றோர்கள் இதுபோன்ற டிவியை தான் வைத்திருந்தனர். எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் அந்த டிவியின் ரிமோட்டே நான் தான்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா எழுதியுள்ள பதிவில்,"டிவி ரிமோட் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்திருக்கலாம் என விரும்புகிறேன். ஏனென்றால் நாம் இன்னும் எடை குறைந்தவர்களாக உடல் கட்டுக்கோப்புடனும் இருந்திருப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாக பரவ நெட்டிசன்கள் இதுகுறித்த தங்களது அனுபவங்களை கமெண்டாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
Brilliant. And I wish the remote was never invented…we would all be a few pounds lighter and more fit! pic.twitter.com/2nmW1L4if4
— anand mahindra (@anandmahindra) March 15, 2023
Also Read | "கனவுல வந்து கழுத்துல மாலை போட்டாரு".. பேமிலி ஆதரவுடன் கிருஷ்ணரை மணந்த இளம்பெண்!!..
மற்ற செய்திகள்