இப்படியொரு ‘தண்டனை’ கொடுப்பது இதுதான் முதல்முறை.. நாட்டையே உலுக்கிய பேருந்து விபத்து.. நீதிமன்றம் ‘பரபரப்பு’ தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த டிரைவருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பன்னா என்ற நகரத்தில், கடந்த 2015-ம் ஆண்டு பேருந்து ஒன்று வறண்ட கால்வாயில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் சிதைந்து போயிருந்தது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
விபத்துக்கு முன்னர் பேருந்தை பயணிகள் மெதுவாக ஓட்டுமாறு டிரைவரிடம் கூறியதாகவும், ஆனால் டிரைவர் சம்சுதீன் அதை உதாசினப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பேருந்தின் அவசரகால வழியை மறித்து கூடுதல் இருக்கை அமைத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக நடைபெற்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் 19 பிரிவுகளின் கீழ் டிரைவர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பேருந்து உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய நபருக்கு இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்