"கெத்தாக நினைத்து இளைஞர்கள் செய்த காரியம்".. சாலையை நோக்கி "கொத்தாக" தூக்கி வீசிய எருமை... 'தரமான' சம்பவம்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எருமை மாடுகளைத் துன்புறுத்தி ரேஸ் ஓட்டிய இளைஞர்களுக்கு எருமை கொடுத்த பதிலடி வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

"கெத்தாக நினைத்து இளைஞர்கள் செய்த காரியம்".. சாலையை நோக்கி "கொத்தாக" தூக்கி வீசிய எருமை... 'தரமான' சம்பவம்.. வீடியோ!

வண்டி மாடுகளைப் பூட்டி, ரேஸ் விடுவது முன்பெல்லாம் வழக்கமாய் இருந்த ஒன்றுதான் என்றாலும், மிருகவதை சட்டதிட்டங்களுக்கு கீழ் அதற்கு சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத இளைஞர்கள் சிலர், மாட்டுவண்டியில் எருமை ஒன்றைக் கட்டி இதேபோல் எருமை மாட்டினைக் கட்டிய சக வண்டியுடன் ரேஸில் ஈடுபட்டனர்.

அதுவும் நெடுஞ்சாலையைப் போலிருக்கும் ஒரு சாலையில் இந்த இளைஞர்கள் எருமை மாட்டினை வேகமாக அடித்து, அடித்து ரேஸில் ஓடவைத்தும், தாங்கள் எல்லாம் சொகுசாக மாட்டு வண்டியில் அமர்ந்தும் கத்திக்கொண்டு வந்துள்ளனர். ஆனால் எருமை மாட்டினை இவ்வளவு வேகமாக செயல்பட வைத்தால் என்ன ஆகும்? அது என்ன நினைத்ததோ தெரியவில்லை, பாதையில் இருந்து விலகி, சாலையின் எதிர்புறத்துக்கு கிராஸ் செய்து ஓட முயற்சிக்க, சாலை நடுவே இருந்த தடுப்பில் வண்டி மோதி,

வண்டியில் இருந்து இளைஞர்கள் சாலையை நோக்கி கொத்தாக தூக்கி வீசப்பட்டனர்.  இந்த வீடியோவைப் பார்த்த பலரும், எருமை தக்க சமயத்தில் சமயோஜிதமாக யோசித்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்