'நாயை பரமாரிக்க ரூ.45 ஆயிரம் சம்பளம்!'.. ‘கல்வித்தகுதி இதுவா?... படிச்ச படிப்பை இப்படியெல்லாமா அவமானப்படுத்துறது?’.. 'வறுத்தெடுத்த' இணையவாசிகள்! உண்மை என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாயைப் பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவை என்று டெல்லி ஐ.ஐ.டி கல்வி நிறுவனம், கல்விசாரா பணியிடத்துக்கான ஒப்பந்த அடிப்படையிலான வேலை அறிவிப்பில்  குறிப்பிடப்பட்டிருந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

'நாயை பரமாரிக்க ரூ.45 ஆயிரம் சம்பளம்!'.. ‘கல்வித்தகுதி இதுவா?... படிச்ச படிப்பை இப்படியெல்லாமா அவமானப்படுத்துறது?’.. 'வறுத்தெடுத்த' இணையவாசிகள்! உண்மை என்ன?

ஆகஸ்ட் 26-ம் தேதி பதிவிட்டு வெளியிடப்பட்ட, இந்த அறிக்கையில் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பி.ஏ, பி.காம், பி.டெக் உள்ளிட்ட படிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாத சம்பளமாக ரூபாய் 45,000 என்று அறிவிக்கப்பட்டிருந்தது

நாயைப் பராமரிக்கும் பணிக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு முடித்தவர்கள் தேவை ஒரு கல்வி நிறுவனமாக இருந்துகொண்டு அறிவிப்பு வெளியிட்டிருப்பது, இதுபோன்ற படிப்புகளில் டிகிரி முடித்தவர்களின் கல்வியை ஏளனப்படுத்தும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக சாடியிருந்தனர். 

இந்நிலையில், உண்மையில் கால்நடை அறிவியலுக்கான தகுதியாகத்தான் பட்டயப்படிப்பு தகுதியை முன்வைத்ததாகவும், பி.காம், பி.டெக் உள்ளிட்ட படிப்புகள்தான் தகுதியானவை என்பது தவறுதலாக வேறொரு விளம்பரத்தில் இருந்து Copy செய்யப்பட்டுவிட்டதாகவும் ஐஐடி தரப்பு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்