1500 ஜிபி டேட்டா... 200 Mbps வேகம், 'வரம்பற்ற' குரல் அழைப்புகள்... அதிரடி 'ஆபர்களால்' தெறிக்க விடும் நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வாடிக்கையாளர்களை தக்கவைக்க ஒவ்வொரு நிறுவனமும் போட்டிபோட்டு ஆபர்களை வாரிவழங்கி வருகின்றன. அந்தவகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூபாய் 1999-க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 200 Mbps வேகத்துடன் 1500 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகியவை 90 நாட்களுக்கு கிடைக்கும்.

1500 ஜிபி டேட்டா... 200 Mbps வேகம், 'வரம்பற்ற' குரல் அழைப்புகள்... அதிரடி 'ஆபர்களால்' தெறிக்க விடும் நிறுவனம்!

தற்போது தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய 2 வட்டங்களில் மட்டும் இந்த ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 1500 ஜிபி என்கிற இந்த டேட்டா வரம்பை நீங்கள் மீறிவிட்டால் இணைய வேகமானது 2 Mbps ஆக குறைக்கப்படும், இந்த 2 Mbps வேகத்தின் கீழ் பதிவிறக்கம் செய்ய அல்லது பதிவேற்ற எந்த வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.