வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சட்ட விதிகள் சொல்வது என்ன? முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்தது.  வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கான விதிமுறைகளை இந்த சட்டம் விளக்குகிறது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சட்ட விதிகள் சொல்வது என்ன? முழு விபரம்..!

Also Read | "நீங்க எந்த வேலைல இருந்தாலும்.. இந்த ஒரு பாடத்தை மட்டும் Life-ல கத்துக்கோங்க".. ஆனந்த் மஹிந்திரா கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!

குழந்தையில்லா தம்பதியினர் குழந்தை செல்வத்துடன் மகிழ்வுற்று வாழ உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்தியாவில் வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 25 முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி இந்தியராக இருக்க வேண்டும்.

Brief details of the Surrogacy Regulation Act 2021 in India

வாடகை தாயாக இருப்பவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக அவர் இருப்பது அவசியம். மனைவி மற்றும் கணவன் அன்றி தனியே வசிப்பவர்கள் அல்லது லிவிங் டுகெதரில் வசிப்பவர்கள், ஏற்கனவே குழந்தை கொண்ட தம்பதிகள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.

வாடகை தாயாக இருப்பவர் 25 - 35 வயதுடையவராக இருக்க வேண்டும். அவர் தன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வாடகை தாயாக இருக்க முடியும். அதற்கு அவர் மற்றும் குழந்தை வேண்டும் தம்பதியினர்  மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் வாடகை தாய் தகுதி சான்றிதழை பெறவேண்டும். வாடகை தாயாக இருக்கும் பெண்ணுக்கு, குழந்தை வேண்டும் தம்பதி 36 மாத காலம் காப்பீடு எடுக்க வேண்டும்.

Brief details of the Surrogacy Regulation Act 2021 in India

இந்தியாவில் சட்ட விரோதமாக வாடகை தாய் மூலமாக குழந்தை பெற உதவுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என சட்டம் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் வணிக ரீதியிலான வாடகை தாய் முறைக்கு இந்தியாவில் தடை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | வாடகைத் தாய் சட்டத்தை மீறினாரா விக்கி - நயன்??.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!!

SURROGACY, SURROGACY REGULATION ACT 2021, SURROGACY REGULATION ACT 2021 IN INDIA, வாடகைத்தாய், சட்ட விதிகள்

மற்ற செய்திகள்