கல்யாணமாகி 3 வது நாளே சுயரூபத்தை காட்டிய மனைவி.. கலங்கிப்போன கணவன்.. போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் திருமணமாகி மூன்றாவது நாளில் கணவனது வீட்டை விட்டு பணத்துடன் ஓட்டம் பிடித்த மனப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் லோதி மொஹல்லா பிதாம்பூர் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் வர்மா. இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்திருக்கின்றனர். அப்போது ரத்னகேடி உஜ்ஜைன் பகுதியை சேர்ந்த ஜோதி சங்கர் லால் சங்கலா என்னும் பெண்மணியின் குடும்பத்தார் நரேஷ் வர்மாவை அணுகியதாக தெரிகிறது. இந்நிலையில், இருவீட்டாருக்கும் பிடித்துப்போன நிலையில் உள்ளூரில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
அதிர்ச்சி
திருமணம் நடந்து முடிந்த பிறகு, நரேஷின் வீட்டுக்கு சென்றிருக்கிறார் ஜோதி. வழக்கம்போல, சடங்குகளும் நடைபெற்றிருக்கின்றன. திருமணம் நடந்த மூன்றாம் நாள் தனது மனைவி வீட்டில் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. வருத்தத்துடன் வீடு திரும்பிய நரேஷ் வர்மாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாயை காணாததால் திடுக்கிட்ட அவர், காணாமல்போன தனது மனைவி மீது பீதாம்பூர் செக்டர் 1 பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
தனிப்படை
திருமணமாகி மூன்றாவது நாளில் பணத்துடன் கணவனது வீட்டை விட்டு தப்பிய ஜோதியை பிடிக்க காவல் ஆய்வாளர் லோகேஷ் சிங் பதவுரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் ஊரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஜோதியின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் ஆகியோரிடம் காவல்துறை நடத்திய விசாரணையின் பலனாக ஜோதி கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், அவருக்கு உறுதுணையாக இருந்த இரு ஆண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து மூன்று பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்