கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. காரணத்தை கேட்டு ‘ஷாக்’ ஆன மணமகன் வீட்டார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புகைப்படக் கலைஞர் வரவில்லை என மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. காரணத்தை கேட்டு ‘ஷாக்’ ஆன மணமகன் வீட்டார்..!

Also Read | ‘9 மாசமா கணவரை காணோம்’.. கைதான மனைவி கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டம் போக்னிபூரில் உள்ள கிராமத்தில் நேற்று திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதனை அடுத்து திருமண மண்டபத்துக்கு ஊர்வலமாக வந்த மணமகனையும், மணமகளையும் இருவீட்டாரும் வரவேற்று உள்ளனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியை போட்டோ எடுக்க புகைப்படக் கலைஞர் வரவில்லையா? என மணமகள் கேட்டுள்ளார். ஆனால் மணமகன் வீட்டார் இதற்கு ஏற்பாடு செய்யவில்லை என சொல்லப்படுகிறது. வாழ்க்கையின் முக்கிய தருணத்தை படம் பிடிக்க ஒரு புகைப்பட கலைஞரை கூட ஏற்பாடு செய்யவில்லை என்ற கோபத்தில் திருமணம் செய்துகொள்ள மணமகள் மறுப்பு தெரிவித்தார்.

 Bride stops marriage after groom forgot to hire photographer

அதனால் கோபமடைந்த மணப்பெண் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறி அவரது வீட்டிற்குள் சென்றார். இதனை அடுத்து உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது, ‘மணமகனுக்கு இந்த திருமண நிகழ்வு குறித்து அக்கறை இல்லை. அவர் எப்படி எதிர்காலத்தில் என்னை சரியாக பார்த்துக்கொள்வார்’ என கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார்.

இதனால் இருவீட்டார் இடையே மண்டபத்திலேயே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. அங்கு இரு வீட்டாரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். புகைப்படக் கலைஞர் இல்லையென மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read | 600 தட்டுகள்.. கண்டெய்னர் லாரியில் வந்த சீர்வரிசை.. திருவாரூரை திரும்பிப் பார்க்க வைத்த 6 சகோதரிகள்..!

GROOM, BRIDE, BRIDE STOPS MARRIAGE, PHOTOGRAPHER

மற்ற செய்திகள்