தாலி கட்டும்போது ஏற்பட்ட பவர் கட்.. "அய்யய்யோ தாலிய மாத்தி கட்டிட்டீங்க".. பதறிய சொந்தங்கள்.. ஒரே நொடியில் மாறிப்போன வாழக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதால் மாப்பிள்ளை தாலியை வேறு ஒரு பெண்ணுக்கு கட்டிய சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது .
திருமணம்
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மாவட்டத்தின் அஸ்லானா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் லால். இவருக்கு நிகிதா மற்றும் கரிஷ்மா என்னும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தனது மகள்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தவேண்டும் என ஆசைப்பட்ட ரமேஷ் லால், அதற்கான பணிகளில் இறங்கினார். அதன் பலனாக தங்வாரா போலா மற்றும் கணேஷ் ஆகிய இரண்டு பேருக்கு தனது இரு மகள்களை திருமணம் செய்துகொடுக்க முடிவெடுத்துள்ளார் ரமேஷ் லால்.
இதனை அடுத்து, நிகிதா மற்றும் கரிஷ்மா ஆகிய இருவருக்கும் தான் நினைத்தபடியே ஒரே மேடையில் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் ரமேஷ் லால் செய்திருக்கிறார்.
பவர் கட்
திருமணத்தின் போது, இரு மணமகள்களும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கின்றனர். மணப்பெண்களான நிகிதா மற்றும் கரிஷ்மா அவர்களது பண்பாட்டின் அடிப்படையில் தலையில் சேலையை முக்காடு போல அணிந்துகொண்டு மணமேடைக்கு வந்தனர். அந்த நேரம் பார்த்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நிகிதா அமர வேண்டிய இடத்தில் கரிஷ்மாவும், கரிஷ்மா இருக்க வேண்டிய இடத்தில் நிகிதாவும் தவறுதலாக மாற்றி அமர்ந்துள்ளனர்.
இருளில் மணமகளை கவனிக்காத மாப்பிள்ளைகளும் தாலி கட்டியுள்ளனர். அதன்பிறகு அக்னியை மணமக்கள் சுற்றிவந்திருக்கின்றனர்.
வெளிச்சத்துக்கு வந்த உண்மை
அதுவரையில் மணமகள்கள் மாறிப்போன விஷயம் யாருக்கும் தெரியவில்லை. மணமகன்களின் வீட்டுக்கு மணமகள்கள் சென்ற பிறகு தான் இந்த குளறுபடி தெரியவந்திருக்கிறது. இதனால் மணமகன் வீட்டார் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அடுத்தநாள் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து பேசி, இந்த தவறை சரி செய்திருக்கிறார்கள்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மணமகள்கள் மாறிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்