விடிஞ்சா ‘கல்யாணம்’.. திருமணக் கோலத்தில் வந்த ‘மணப்பெண்’.. பாவம் யாருக்கும் இந்த ‘நிலைமை’ வரக்கூடாது.. நொறுங்கிப் போன குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்துக்கு முந்தைய நாள் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து மணப்பெண் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மணமகன் எடுத்த ஒரு முடிவு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

விடிஞ்சா ‘கல்யாணம்’.. திருமணக் கோலத்தில் வந்த ‘மணப்பெண்’.. பாவம் யாருக்கும் இந்த ‘நிலைமை’ வரக்கூடாது.. நொறுங்கிப் போன குடும்பம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவதேஷ் என்பவருக்கு இருவீட்டார் திருமணம் பேசி முடித்துள்ளனர். இந்நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் மணப்பெண் ஆர்த்தி திருமண அலங்காரம் செய்துகொண்டு வீட்டிலிருந்து மண்டபத்துக்கு கிளம்பியுள்ளார்.

Bride fell from the roof a few hours before the wedding

அப்போது ஆர்த்தி மாடிப்படியில் ஏறிக்கொண்டு இருக்கும்போது, விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தை மாடியில் இருந்து தவறி விழ சென்றுள்ளது. இதைப் பார்த்த ஆர்த்தி உடனே குழந்தையை காப்பாற்ற முயறுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக கால் தவறி ஆர்த்தி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே ஆர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மணப்பெண் ஆர்த்தியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், முதுகெழும்பில் பயங்கரமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சில மாதங்கள் படுத்தப் படுக்கையாக இருக்கதான் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Bride fell from the roof a few hours before the wedding

மேலும் காயங்கள் ஆறினால்தான் அடுத்து என்னவென்று சொல்லமுடியும் என்றும், முதுகெழும்பு சரியாகவில்லை என்றால் நிரந்தரமாக அவர் படுத்தப் படுக்கையாகவே இருக்கும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் மணமகனின் வீட்டுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஆர்த்தியின் தங்கையை தற்போது திருமணம் செய்து தருகிறோம், உங்களுக்கு சம்மதமா? என கேட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் மணமகன் அவதேஷுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bride fell from the roof a few hours before the wedding

உடனே மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்று ஆர்த்தியை அவதேஷ் பார்த்துள்ளார். அப்போது அவதேஷ் ஒரு முடிவெடுத்தார். எப்போது எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதோ அப்போது ஆர்த்தியை நான் மனைவியாக ஏற்றுக்கொண்டேன். அதனால் அவர் எந்த நிலைமையில் இருந்தாலும் அவரை நான் திருமணம் செய்துகொள்வேன் என பெண் வீட்டாரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட ஆர்த்தியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவதேஷுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Bride fell from the roof a few hours before the wedding

இதனை அடுத்து மருத்துவமனையில் ஸ்டெக்சரில் படுத்திருந்த ஆர்த்திக்கு குறித்த நேரத்தில் உறவினர்கள் முன்னிலையில் அவதேஷ் தாலி கட்டினார். திருமண முடிந்ததும் ஆர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. இதனால் அதற்கான படிவத்தில் ஆர்த்தியின் கணவர் அவதேஷ் கையெழுத்திட்டார்.

திருமணத்துக்கு முந்தைய நாள் விபத்தில் சிக்கி மணப்பெண் படுத்த படுக்கையான நிலையில், எல்லோரும் திருமணம் நின்றுவிடும் என எண்ணிய நிலையில், அதேபெண்ணை குறித்த நேரத்தில் மணமகன் திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற்று வரும் அப்பெண் சீக்கிரம் குணமடைந்து, கணவருடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பலரும் இணையத்தில் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்