தாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையின் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்.. நடந்தது என்ன.? அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலத்தில் திருமணத்தன்று மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையின் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்.. நடந்தது என்ன.? அதிர்ச்சி சம்பவம்!

திருமணம்

ஆந்திராவை சேர்ந்த சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பிரம்மாண்ட முறையில் அங்காரங்கள் செய்யப்பட்டு, கடந்த 3 நாட்களாக திருமண சடங்குகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் நேற்று தாலி கட்டும் நேரத்திற்கு முன்பாக, மணப்பெண்ணுக்கு வாழ்த்து கூறும் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், திடீரென ஸ்ருஜனா, மணமகன் சிவாஜியின் மடியிலேயே மயங்கி விழுந்தார்.

Bride dies during a wedding ceremony in Andhra

சோகம்

இதனையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஸ்ருஜனா அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் ஸ்ருஜனா இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, உறவினர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர். இதனையடுத்து, காவல்துறை இந்த சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கியது.

மணமகனின் மடியிலேயே மணப்பெண் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் ஸ்ருஜனா விஷம் அருந்தியதன் காரணமாகவே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

Bride dies during a wedding ceremony in Andhra

விசாரணை

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய விசாகப்பட்டினம் வடக்கு மண்டல துணை கமிஷனர் ஸ்ரீநிவாஸா," கடந்த புதன்கிழமை அன்று வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் ஸ்ருஜனா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அடுத்தநாளே மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார் அவர். இதனிடையே திருமணத்தன்று மயங்கி விழுந்த அவர் விஷம் அருந்தியதன் காரணமாக மரணமடைந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஸ்ருஜானாவின் தந்தை முன்ஜெதி ஈஸ்வர ராவ் புகார் அளித்ததை தொடர்ந்து ஐபிசி பிரிவு 174 (சந்தேகத்திற்குரிய மரணம்) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது" என்றார்.

Bride dies during a wedding ceremony in Andhra

இதைத் தொடர்ந்து, திருமண பெண் என்ன காரணத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தார் என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஆந்திராவில் கல்யாணத்தன்று மணமகனின் மேடையில் மயங்கிவிழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

VISAKHAPATNAM, MARRIAGE, BRIDE, விசாகப்பட்டினம், திருமணம், மணப்பெண்

மற்ற செய்திகள்