"கார் கொடுத்தா கல்யாணம்".. டிமாண்ட் வைத்த மாப்பிள்ளை.. சிங்கப்பெண்ணாய் மாறிய மணமகள்.. எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இமாச்சலப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காது என மணமகன் கூறிய நிலையில் மணப்பெண்ணே அந்த திருமணத்தை நிறுத்தி, காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

"கார் கொடுத்தா கல்யாணம்".. டிமாண்ட் வைத்த மாப்பிள்ளை.. சிங்கப்பெண்ணாய் மாறிய மணமகள்.. எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | சைலண்டாகவே இருந்த CO-PILOT.. விளையாடுறாருன்னு நெனச்சு தரையிறக்கிய விமானி.. அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சிருக்கு..!

திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கள எதார்த்தம் அப்படி இல்லை. இன்னும் பல இடங்களில் வரதட்சணை காரணமாக பெண்கள் பாதிப்புகளை சந்தித்து தான் வருகின்றனர். இதனை தடுக்க, பல்வேறு விதங்களில் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் வரதட்சணையால் ஒரு திருமணமே நின்று போயிருக்கிறது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இரு தரப்பிலும் கல்யாண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கின்றன. வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த மணமகன் திருமணத்திற்காக வீடு திரும்பியதும் திருமண சடங்குகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மணமகள் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது.

Bride cancel the Marriage after Groom demand car and Dowry

Images are subject to © copyright to their respective owners.

அதன் பின்னர் மணமகன் வீட்டிற்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர் சென்று சடங்குகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் திருமண நாள் அன்று மணப்பெண் விட்டார் தயாராக இருந்த சூழ்நிலையில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கின்றனர். அப்போது நகை, ரொக்கம் மற்றும் கார் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட வேண்டும் என மணமகன் கேட்டதாக தெரிகிறது. இதற்கு முன்னர் அது பற்றி ஏதும் பேசாததால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

அப்போது மணப்பெண் துணிச்சலாக சென்று இந்த திருமணத்தை முறித்துக் கொள்வதாகவும் "நீங்கள் வீட்டிற்கு செல்லலாம்" எனவும் மணமகன் வீட்டினரிடம் தெரிவித்திருக்கிறார். அதன்படி மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து அதிர்ச்சியுடன் கலைந்து சென்று இருக்கின்றனர். அதனுடன் தனது திருமணத்திற்கு வந்த அனைவரும் பசியுடன் செல்லக்கூடாது என கூறிய அந்த மணப்பெண் அனைவரும் சாப்பிட்டு செல்லும்படி தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

Bride cancel the Marriage after Groom demand car and Dowry

Images are subject to © copyright to their respective owners.

இதனை அடுத்து தனது சகோதரருடன் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் அந்த மணப்பெண். இது தொடர்பாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பங்கனா காவல் நிலையத்தில் வரதட்சணை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் நிலைய பொறுப்பாளர் பாபு ராம் தெரிவித்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "அவர் அப்படித்தான் சொல்லுவாரு.. ஓட்டு போட்ருங்க".. ஒரே வீட்டுக்குள் வாக்கு சேகரிக்க சென்ற பொன்முடி & செல்லூர் ராஜு.. வைரலாகும் கலகல வீடியோ..!

BRIDE, MARRIAGE, GROOM, DEMAND, DOWRY

மற்ற செய்திகள்