இம்மா பெரிய சைஸ்'ல Contract.. மொத்தமா 8 Rules.. மிரள வைத்த மணமக்கள்.. "ஒவ்வொரு கண்டிஷனும் தாறுமாறா இருக்கே.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில், திருமணம் என்றாலே ட்ரெண்டிங் என்ற ஒரு சூழ்நிலை என்றாகி விட்டது.

இம்மா பெரிய சைஸ்'ல Contract.. மொத்தமா 8 Rules.. மிரள வைத்த மணமக்கள்.. "ஒவ்வொரு கண்டிஷனும் தாறுமாறா இருக்கே.."

Also Read | "கால்சியம், வைட்டமின்'னு ஏகப்பட்ட சத்து இருக்காம்ல.." திடீரென வைரலாகும் சிவப்பு எறும்பு 'சட்னி'..

உதாரணத்திற்கு திருமணத்திற்கு வைக்கப்படும் பேனர்களில் வித்தியாசமாக ஏதாவது புகைப்படங்கள் அல்லது வாசகங்கள் இடம்பெற்றிருப்பது, திருமணத்திற்காக வித்தியாசமான முறையில் போட்டோஷூட் எடுப்பது, திருமண மேடையில் வைத்து வேடிக்கையாக எதையாவது திட்டம் போடுவது என திருமணம் என்றாலே, ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும் அளவிற்கு உருவாகி விட்டது.

அந்த வகையில், தற்போது ஒரு திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

காண்ட்ராக்ட் போட்டு கல்யாணம்

ஒரு புதுமண ஜோடி திருமணத்திற்கு பின்னர் Contract போட்டு, அதில் கையெழுத்து போடும் புகைப்படங்கள் தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. மிகப் பெரிய அளவில், இந்த Contract பாண்டு இருக்கும் நிலையில், அதிலுள்ள பாய்ண்ட்களை படித்து விட்டு, அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில், மணமக்கள் கையெழுத்தும் போடுகின்றனர்.

Bride and groom signed in 8 rules contract

அதே போல, இதற்கு சாட்சியம் அளிக்கும் வகையில், இருவரின் குடும்பத்திலுள்ள பலரும் அங்கே கையெழுத்தும் போட்டுள்ளனர். இவை அனைத்தையும் விட, ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், அதிலுள்ள 8 விதிமுறைகள் தான்.

15 நாளுக்கு ஒரு தடவ ஷாப்பிங்..

முதல் விதியாக, மாதத்திற்கு ஒரு pizza மட்டும் தான் உண்ண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டாவதாக வீட்டில் இருந்து செய்யப்படும் உணவினை தான் உண்ண வேண்டும் என இருக்கிறது. அதே போல, மணப்பெண்ணுக்கான விதியாக 3 ஆவது விதி உள்ளது. அதாவது, தினமும் புடவை அணிய வேண்டும் என்பது தான் அது. இரவில் தாமதமாக பார்ட்டிக்கு செல்லலாம். ஆனால், இருவருமாக சேர்ந்து தான் செல்ல வேண்டும் என்ற விதியும் உள்ளது.

Bride and groom signed in 8 rules contract

ஜிம்மிற்கு தினமும் செல்ல வேண்டும் என்பதும், ஞாயிற்றுக்கிழமை காலை உணவு இருவரும் மாறி மாறி சமைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. கடைசி இரண்டு விதிகளாக எந்த பார்ட்டிக்கு சென்றாலும் சிறந்த புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்றும், இறுதியில் ஒவ்வொரு 15 நாட்களுக்கு பிறகும் ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படி மொத்தம் 8 விதிமுறைகள் உள்ள ஒரு காண்ட்ராக்ட் பேப்பரில் மணமக்கள் சம்மதம் தெரிவித்து கையெழுத்தும் போட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "சுத்த முட்டாள்தனம்'ங்க இது.." முக்கியமான மேட்சில் பும்ரா செய்த தவறு..? விளாசித் தள்ளிய பீட்டர்சன்

BRIDE, GROOM, MARRIAGE, SIGNED, CONTRACT

மற்ற செய்திகள்