பெண்களை பகிரங்கமாக ஏலம் விட்ட புல்லிபாய் ஆப்.. ஆக்சனில் மத்திய அரசு.. பின்னணி
முகப்பு > செய்திகள் > இந்தியாஇஸ்லாமிய சமுதாய பெண்களை ஏலத்தில் விட்டதாக புல்லிபாய் என்னும் செயலி மீது புகார் எழுப்பப்பட்ட நிலையில், தற்போது இதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீப காலமாகவே, பெண்களின் புகைப்படங்களை, அதுவும் குறிப்பாக இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களைக் கொண்டு அவதூறு பரப்பப்பட்டு வருவதாக, அதிகம் புகார்கள் எழுந்தது.
அது மட்டுமில்லாமல், புல்லிபாய் என்னும் செயலி ஒன்றின் மூலம், பெண்கள் விற்பனைக்கு என்பது போன்ற அருவருத்தக்க விளம்பரங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில், இஸ்லாமிய பெண்களை குறி வைத்து, இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
சென்னையில் கடன் தொல்லை.. குடும்பத்தினரைக் கொன்று.. வங்கி அதிகாரி எடுத்த விபரீத முடிவு
குறி வைக்கப்படும் பெண்கள்
இதே போன்று ஒரு சட்டவிரோத தாக்குதல்கள், கடந்த சில மாதத்திற்கு முன்பும் நடைபெற்றிருந்தது. சுள்ளி டீல்ஸ் என்னும் செயலியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு, அவர்கள் விறபனைக்கு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடும் சர்ச்சை
இந்த செயலியில் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள், சம்மந்தப்பட்ட பெண்களின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். இந்த செயலி தொடர்பாக புகார் அதிகம் எழுந்த நிலையில், உடனடியாக இந்த செயலி முடக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது அதே போன்று தான் புல்லிபாய் என்னும் செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்கள் விற்பனைக்கு என இடம்பெற்றுள்ளது, அதிகம் அதிர்ச்சியையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கொந்தளித்த எம்பி
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான, கிட் ஹப் என்னும் மென்பொருள் பகிர்வு தளம் தான் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கத்தில், 'பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி, பலமுறை கேட்டுக் கொண்டும் அதற்கு பலனில்லை. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
செயலி முடக்கம்
தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினரும் இந்த செயலிக்கு எதிராக தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கிட்ஹப் மூலம் சம்மந்தப்பட்ட செயலி முடக்கப்பட்டு விட்டது. இணைய வழி குற்றங்களைக் கண்காணிக்கும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவும், காவல்துறையும் ஒருங்கிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன' என தெரிவித்தார்.
கண்டனக் குரல்
மேலும், இந்த புல்லிபாய் செயலியில் புகைப்படங்களை சட்ட விரோதமாக பதிவிட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும், இது போன்ற சட்ட விரோத தாக்குதல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்