"நோட் பண்ணுங்கப்பா".. ஓவர்டேக் பண்ண காரில் காத்திருந்த சர்ப்ரைஸ்.. வெக்கத்தில் சிவந்த இளம்பெண் முகம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, நமக்கு மிகவும் பிடித்த நபரிடம் நமது காதலை சர்ப்ரைஸாக வெளிப்படுத்த முயற்சிக்கும் போது புதுமையான வழிகளை தான் பலரும் கையாளுவோம்.
தங்களின் காதலை ஏற்று விட்டால், எதிர்காலத்தில் அந்த தருணத்தை எண்ணி மனம் நெகிழும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், காதலை எப்படியாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இப்படி முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
அதே போல, காதலித்து வருவபவர்களோ திருமணம் செய்து கொண்டவர்களோ ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, தங்கள் மனதுக்கு நெருக்கமானவரின் பிறந்தநாள் வரும் சமயத்தில், ஏதேனும் வித்தியாசமாக ஒரு சர்ப்ரைஸ் அல்லது பரிசை கொடுக்க வேண்டும் என்று தான் பலரும் நினைப்போம்.
அப்படி கொடுக்கும் பரிசுகள் அல்லது சர்ப்ரைஸ்கள், நிச்சயம் சம்மந்தப்பட்ட நபரை மெய்சிலிர்க்க வைப்பதுடன் மட்டுமில்லாமல், தங்கள் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அறியவும் உதவுகிறது. இப்படி மனம் உருக வைக்கும் அன்பை வெளிப்படுத்த கூடிய வகையிலான பல நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் அல்லது செய்திகளை நாம் அதிகம் கடந்து வந்திருப்போம்.
அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.
இது தொடர்பாக வைரல் ஆகி வரும் வீடியோவின் படி, கார் ஒன்றில் இளம்பெண் ஒருவர் டிரைவர் இருக்கை அருகே முன் சீட்டில் அமர்ந்திருக்கிறார். முதலில் அவரது முகம் சற்று சோர்ந்து போயிருக்க, சட்டென தங்களின் காரை ஓவர் டேக் செய்து போகும் கார் ஒன்றை பார்த்ததும் அந்த இளம்பெண்ணின் முகம் முழுக்க புன்னகை தான் நிரம்பி நிற்கின்றது.
இதற்கு காரணம் என்ன என்பது தான், தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. காருக்குள் இருக்கும் இளம்பெண்ணின் பிறந்தநாள் தினம் அது என தகவல் தெரிவிக்கும் நிலையில், அவர் காதலனுடன் வெளியே சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. அப்போது அவர்களை முந்தி செல்லும் காரின் பின்னால், "Happy Birthday" என பெரிதாக எழுதப்பட்டுள்ளது.
இதனைக் கண்டதும் அந்த பெண்ணும் சிரித்துக் கொண்டே வெட்கப்பட, தனது முகத்தையும் கைகளால் மூடிக் கொள்கிறார். தனது பிறந்தநாளில் காதலன் கொடுத்த சர்ப்ரைஸ் கண்டு இளம்பெண்ணின் முகம் வெட்கத்தில் சிவந்தது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்