Video: "ஆஹா.. இது அதுல்ல.." - ‘பந்துவீச்சில்’ அப்படியே ‘அனில் கும்ப்ளேவை’ கண்முன் கொண்டுவந்த ‘வீரர்’!.. ‘தீயாய்’ பரவும் ‘வீடியோ’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவின் அதே பாணியில் பும்ரா பந்து வீச முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Video: "ஆஹா.. இது அதுல்ல.." - ‘பந்துவீச்சில்’ அப்படியே ‘அனில் கும்ப்ளேவை’ கண்முன் கொண்டுவந்த ‘வீரர்’!.. ‘தீயாய்’ பரவும் ‘வீடியோ’!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருக்கும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய பந்துவீச்சாளர் பும்ரா, அனில் கும்ப்ளே போல் சுழற் பந்து வீசும் முயற்சியை முன்னெடுத்தார்.

 

இதனை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. பந்துவீசும் விதத்தில் கும்ப்ளேவை அப்படியே பிரதிபதிலித்தார் பும்ரா. இதற்கென அவர் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே சுமார் 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளை எடுத்தவர்.

ALSO READ: “இது என் கடைசி ஆசைனு சொன்னார்”.. இறந்து போன மனைவியை ‘இப்படி’ பார்த்ததும் பீறிட்டு அழுத கணவர்!’.. மனதை உருக்கும் நெகிழ்ச்சி வீடியோ!

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை அதிக விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் எடுத்தவர் கும்ப்ளே மட்டும் தான் என்பதும், சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னேவை அடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கும்ப்ளே என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்