ஆட்டோ கட்டணத்திற்கு வரி.. மத்திய அரசு புதிய உத்தரவு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புதுடெல்லி: ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து  ஆட்டோ சேவைகளை பெற்றால் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆட்டோ கட்டணத்திற்கு வரி.. மத்திய அரசு புதிய உத்தரவு

ஆட்டோ சேவை பொதுவாக இரண்டு விதங்களாக தற்போது உள்ளது.  நேரடியாக கட்டணம் பேசி ஆட்டோவில் பயணம் செய்வது ஒருவகையாகும். அதேநேரம் தனியார் நிறுவனங்ளின்  ஆப்கள் மூலமாக பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வது இன்னொரு வகையாகும். இது வரை இந்தியாவில்

இரண்டு வகையான ஆட்டோ சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு  உள்ளது.

ஆனால் நிதியமைச்சகம் ஆன்லைன் ஆட்டோ சேவைகளுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது.  நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறை நவம்பர் 18ம் தேதி வெளியிட்ட கடிதத்தில் இதுபற்றி கூறியுள்ளது.  `இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு திரும்ப பெறப்படுகிறது. 

தற்போது சந்தையில் இணையதள தொழில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1, 2022 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆப்லைனிலோ அல்லது நேரிலோ சென்று ஆட்டோ சேவை பெறுவதற்கு இந்த விதி பொருந்தாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் ஆன்லைனில் ஆட்டோவை புக்கிங் செய்தால் அதற்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி பயணிகளிடம் இருந்தே வசூலிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக ஆட்டோ கட்டணம் நாடு முழுவதும் கணிசமாக உயரலாம்.  

ஆன்லைனில் புக்கிங் செய்தால் வரி என்ற  உத்தரவு ஆட்டோவிற்கு மட்டுமல்ல, ஏற்கனவே உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் உணவு ஆர்டர் செய்தாலும் வரி விதிக்கப்படுகிறது.  இதனிடையே ஆன்லைன் ஆட்டோ சேவைக்கு வரி என்ற உத்தரவு, இருவிதமான ஆட்டோ சேவையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும், ஆன்லைன் பதிவு ஆட்டோ சேவை நிறுவனங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் கலங்குகிறார்கள்.Booking Auto via online like Ola-Uber ? Get ready to pay 5% GST

AUTO, OLA, UBER, ஆட்டோ, ஆன்லைன் ஆட்டோ

மற்ற செய்திகள்